இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா

covid19 india
By Irumporai Apr 29, 2021 05:05 AM GMT
Report

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,79,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை வாட்டி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.83 கோடியாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.04 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பேர் தொற்றிலிருந்து 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.50 கோடியாக அதிகரித்துள்ளது.