சண்டையில் விபரீதம்- தூங்கிய கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி

india-husband-wife
By Jon Jan 06, 2021 11:56 AM GMT
Report

வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் தாமதமாக வீட்டுக்கு வந்ததால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது கொதிக்கும் எண்ணெய்யை அவர் முகத்தில் ஊற்றி இருக்கிறார். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் அஹிர்வார் (38).

இவருக்கு சிவகுமாரி (35) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அரவிந்த் தினக்கூலி வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்களாம். அப்போது, பெற்றோர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.

நேற்றும் இதுபோல இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. தினமும் வேலைக்கு சென்று வீட்டிற்கு தாமதமாக வருவதால் கணவனிடம் சிவகுமாரி சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்குள் பயங்கரமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி காலை 5 மணிக்கு கொதிக்கும் எண்ணெயை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தின் முகத்தில் ஊற்றி இருக்கிறார்.

இவர் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனே அரவிந்த்தை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முகத்தில் எண்ணெய் கொட்டியதால் அரவிந்த் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசாருக்கு அரவிந்த் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் அப்பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.