துருக்கிக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா : விமானத்தை தடுத்த பாகிஸ்தான் : சர்ச்சையான விவகாரம்
துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பூகம்பங்கள் ஒட்டு மொத்த உலக மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது, துருக்கியில் கடந்த 36 மணி நேரமாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முடக்கி போட்டுள்ளது.
இந்தியா நிவாரண உதவி
துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடியாக அனுப்பி வைத்தது.
குறிப்பாக காஷ்மீர் விவகாரம் சிஏஏ விவாகரத்திலும் இந்தியாவின் நிலைப்பாட்டினை துருக்கி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இந்தியா நிவாரணப் பொருட்களை கொடுக்க முன் வந்த நிலையில் தான் துருக்கிக்கு இந்தியா அனுப்பிய நிவாரண பொருட்கள் கொண்ட விமானத்தை தங்கள் வான் பகுதியில் நுழைய விடாமல் பாகிஸ்தான் தடுத்து உள்ளது. இதனால் இந்திய விமானம் மாற்று பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
முட்டுக்கட்டை போட்ட பாகிஸ்தான்
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பாக நிவாரண பொருட்கள், மருந்துகள், உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதோடு 100 மீட்பு படை வீரர்கள் துருக்கி சென்றுள்ளனர். இது போன்ற மீட்பு பணிகளில் உடல்களை, மனிதர்களை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற நாய்களும் இந்த மீட்பு பணிக்கு களமிறங்கி உள்ளது.
பல்வேறு மீட்பு உபகரணங்களும் இதில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இந்த விமானத்தைதான் தங்கள் வான் பகுதியில் செல்ல பாகிஸ்தான் மறுத்துள்ளது துருக்கிக்கு இந்தியாவில் இருந்து செல்ல பாகிஸ்தான் வான் பகுதியை எளிதாக பயன்படுத்த முடியும்.
ஆனால் பாகிஸ்தான் இதற்கு மறுக்கவே இந்தியா பாகிஸ்தான் வழியாக செல்லாமல் சுற்றி சென்றுள்ளது. பாகிஸ்தான் - துருக்கி நட்பு நாடுகளாக இருந்தும் பாகிஸ்தான் இக்கட்டான நேரத்தில் இப்படி செயல்பட்டது விமர்சனத்தை சந்தித்து உள்ளது. இந்தியாவின் இந்த உதவிகளை துருக்கி வெளியுறவுத்துறை நட்பான அணுகுமுறை என்று பாராட்டியது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.