கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட போது இந்தியா உதவியதை மறக்க முடியாது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

india corona joebiden
By Irumporai Apr 28, 2021 04:22 AM GMT
Report

கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் பேசினார்.

அப்போது இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் உடன் நிற்கும், அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை மறக்க முடியாது என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் ஜோ பைடன் கூறும்போது, 'உடனடியாக இந்தியாவுக்கு ஒட்டுமொத்த உதவிகளை அனுப்புகிறோம். ரெம்டெசிவிர், மற்றும் பிற மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக அனுப்புகிறோம்

. அதே போல் வாக்சின் தயாரிப்பதற்கான இயந்திரத்துக்குரிய உதிரி பாகங்களையும் அனுப்புகிறோம்.

இப்போதைக்கு என்ன பிரச்சினை எனில், நோவாவாக்ஸ் உள்ளிட்ட வாக்சின்கள் கையிலிருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

இதனை உறுதி செய்து கொண்ட பின் தடுப்பூசிகளையும் தேவையுள்ள நாடுகளுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அமெரிக்கா ஆரம்ப கட்ட கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட போது இந்தியா உதவியதை மறக்க முடியாது. என கூறியுள்ளார்.