பிபின் ராவத் மறைவு - 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - அனைத்து அரசு விழாக்கள் ரத்து - உத்தர்காண்ட் முதல்வர் அறிவிப்பு

india-helicopter-crash cm-of-uttarakhand-notice
By Nandhini Dec 09, 2021 06:44 AM GMT
Report

1958ஆம் ஆண்டு மார்ச் 16ம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தில் ராணுவ அதிகாரியான எஸ்.எஸ்.ராவத்திற்கு மகனாக பிறந்தவர் தான் பிபின் ராவத். இவர் சிறந்த ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக உயர் பொறுப்பை வகித்த பெருமை பெற்றவர்.

இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்திய முப்படை தலைமை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மறைவு உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அவருக்கு இரங்கல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர் பிறந்த உத்தர்காண்ட் மாநிலம், அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

உத்தர்காண்ட் மாநில முதல்வர் புஷ்கர் மிங் தமி, தனது வீட்டில் பிபித் ராவத்திற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தி, அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‛பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்ஜியின் மறைவிற்கு இந்தியா முழுவதும் இரங்கல் அலை வீசுகிறது. புனித ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் போது, அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் இருக்கும், அரசு விழாக்கள் எதுவும் நடத்தப்படாது’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் உத்தர்காண்ட் முதல்வர் புஷ்கர் மிங் தமி பேசுகையில், ‘என் தந்தையைப் போன்ற வழிகாட்டியை இன்று இழந்துவிட்டேன். ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு உத்தரகாண்ட் மற்றும் இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மறைந்த ஸ்ரீமதி மதுலிகா ராவத் ஜியிடம் நாங்கள் எப்போதும் அன்பைப் பெற்றுள்ளோம்’ என்றார்.