பறவை காய்ச்சல் தீவிரம்: முட்டையை பச்சையாக சாப்பிட வேண்டாம்
பறவை காய்ச்சல் பரவி வருவதால் கோழி முட்டைகளை பச்சையாக சாப்பிட வேண்டாம் என தமிழக கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர் ஜி.தினகராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், பறவை காய்ச்சல் நோயானது கோழி, வாத்து மற்றும் பறவைகளுக்கு மட்டுமே பரவியுள்ளது.
மனிதர்களுக்கு பரவியதாக தகவல்கள் ஏதும் இல்லை, இருந்தாலும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கோழி, வாத்து முட்டைகளை நன்றாக வேக வைத்து சாப்பிடுங்கள், 70 டிகிரியில் அதிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
பச்சை முட்டை மற்றும் ஆஃப்பாயில் போன்றவைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் பறவைகள் இறந்து கிடந்தால் உடனடியாக கால்நடை மருத்துவ மையத்துக்கு தகவல் தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.