உயிரை கொடுத்து ஆடிய கிரிக்கெட் வீரரை நீக்கிய பிசிசிஐ - கொந்தளிக்கும் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஹனுமன் விஹாரி சேர்க்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பின்னர் டெஸ்ட் தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 7 ஆம் தேதி நிறைவடைகிறது.
இதனிடையே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. மேலும் இந்திய அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேசமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஹாரி அணியில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் முக்கியமான டெஸ்ட் வீரர்களில் ஒருவரான ஹனுமா விஹாரி கடைசியாக ஆஸ்திரேலியாவில் எஸ்டிஜி டெஸ்டில் கஷ்டமான போட்டியை டிரா செய்ய முக்கிய காரணமாக இருந்தார்.
இதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல காரணமாக இருந்தது. அந்த போட்டியில் முதுகில் விஹாரிக்கு காயம் இருந்தது. அந்த காயத்தோடு விஹாரி உயிரைக் கொடுத்து ஆடினார். மிக பெரிய அளவில் காயத்தால் கஷ்டப்பட்டும் கூட இந்திய அணிக்காகக் கடைசி வரை நின்று ஆடி ஆட்டத்தை டிரா செய்தார்.
இந்திய அணி கில், ஷ்ரேயாஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சிப்பதால் இவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்பதால் விஹாரி இனி இந்திய அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது.