தலைமுடியை விற்று குழந்தைகளை காப்பாற்றிய தாய்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

mother hair children
By Jon Jan 16, 2021 06:05 AM GMT
Report

சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேலத்தின் பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி பிரேமா. செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்த செல்வத்துக்கு, 5 லட்ச ரூபாய் வரை கடன் இருந்துள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த செல்வம், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். கணவனை இழந்த பிரேமா கடும் கஷ்டத்தை சந்தித்துள்ளார், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பிடவே வழியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்களும் சிரமத்தை கொடுக்க, பிரேமாவும் தற்கொலைக்கு முயன்றார், எனினும் உடன் பணியாற்றவர்கள் பிரேமாவை காப்பாற்றிவிட்டனர்.

இந்நிலையில் தன்னுடைய தலைமுடியை விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.

இத்தகவலை சமூகவலைத்தளங்களில் நபர் ஒருவர் வெளியிட, பலரும் உதவி செய்து வருகின்றனர், இதேபோன்று மாவட்ட நிர்வாகமும் பிரேமாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.