கடைசி இடத்தை பிடித்த இந்தியா; அதுவும் இந்த விஷயத்தில்.. வாய் பிளக்கும் உலக நாடுகள்!
அதிக விவாகரத்தைப் பெறும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
விவாகரத்து
100-இல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன. அதில், உலகிலேயே அதிக விவகாரத்தை பெறும் நாடாக ஐரோப்பா நாடான போர்ச்சுக்கல் மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு 94 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக கூறப்படுகிறது. அடுத்த இடத்தில் ஸ்பெயின், 85 சதவீதத்துடன் உள்ளது. இதேபோன்று பின்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்டவைகளிலும் விவாகரத்து ஆகும் சதவீதம் 50% யை தாண்டி உள்ளது.
இந்தியா எந்த இடம்?
இதில் அமெரிக்கா மற்றும் கனடாவும் அடங்கும். இந்தப் பட்டியலில் கடைசியாக இந்தியாவில் மிக மிக குறைந்த அளவுக்கே விவாகரத்து நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இங்கு விவாகரத்து சதவீதம் 1% ஆக உள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் வியட்நாம் உலகிலேயே விவாகரத்து குறைவாக பெறும் இரண்டாவது நாடாக இருக்கிறது.
இதற்கு காரணமாக இந்திய சட்ட அமைப்புகளே உள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்தத் தகவல் பெருமை அளிப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.