இந்தியாவின் அந்த மனிதாபிமான செயல் - நெகிழ்ச்சியில் பாகிஸ்தான்!
இந்தியா பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்தியா சார்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இது இரண்டு நாடுகள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தமும் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இருந்தபோது நீர் மட்டம், வெள்ள அபாயம் உள்ளிட்டவை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தகவல் பரிமாறி வந்தனர்.
ஆனால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து விதமான தகவல் பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அதிருப்தியில் உள்ளது.
பாகிஸ்தான் நெகிழ்ச்சி
இந்நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை கூறுகையில், "சிந்து நதி ஒப்பந்தம் இருந்தபோது இந்த தகவல்கள் சிந்து நதிநீர் ஆணையர் மூலம் பரிமாறப்பட்டது. தாவி நதியை பொறுத்தவரை இது இமயமலையில் உற்பத்தியாகி, ஜம்மு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் செனாப் நதிக்கு செல்கிறது.
மழை காரணமாக அங்கு அதிகளவு தண்ணீர் உள்ளது. இதனால் இந்திய தூதர் மூலமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் எல்லையில் ஒலிப்பெருக்கி மூலமாகவும் பாகிஸ்தான் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. " என தெரிவித்துள்ளது.
தாவி நதியில் தண்ணீர் அதிகளவு செல்வதால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு, இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.