கூலி வேலை செய்யும் சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை தினக்கூலியாக வேலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட களத்தில் தாய்லாந்து மற்றும் பூட்டானில் நடைபெற்ற கால்பந்தாட்ட தொடரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர் சங்கீதா சோரன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பன்ஸ்முரி கிராமத்தில் அவர் செங்கல் சூளையில் வேலை செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தனது குடும்பத்தின் நிதிச்சூழல் காரணமாகவே தான் செங்கல் சூளையில் வேலை செய்வதாக சங்கீதம் சோரன் கூறியுள்ளார். தனது அப்பாவுக்கு கண் பார்வையில் கோளாறு. அவரால் சரிவர கேட்கவும் முடியாது என்பதால் மூத்த சகோதரர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருவதாகவும், தானும் வீட்டு தேவைக்காக நான் வேலை செய்கிறேன் என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஒரு பக்கம் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டே தனது விளையாட்டு கனவையும் விடாமல் துரத்தி வருகிறார் சங்கீதா. தினமும் காலையில் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்து வருகிறார்.
அவரது நிலையை அறிந்த ஜார்க்கண்ட் அரசு தகுந்த உதவியை அளிப்பதாக இரண்டாவது முறையாக உத்தரவாதம் அளித்துள்ளது.