விண்வெளியில் பறக்கவிடப்பட்ட இந்தியதேசியக் கொடி : இளம் விஞ்ஞானிகளின் அசரவைக்கும் முயற்சி

By Irumporai Aug 15, 2022 09:38 AM GMT
Report

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது நிலையில் பூமியிலிருந்து 30 கிலோமிட்டர் உயரத்தில் இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் கிட்ஸ்

இதனை இளம் விஞ்ஞானிகள் அமைப்பை கொண்ட தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் தேசியக்கொடியினை பலூன் மூலம் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம்  தனது ட்விட்டர் பதிவில் :

விண்வெளிக்கு அருகில் 30 கி.மீ. தொலைவில் இந்தியக் கொடியை ஏற்றி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

இந்தியாவுக்கு சமர்ப்பணம்

அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு நாளும் இந்தியாவை பெருமைப்படுத்த கடுமையாக போராடும் மக்களுக்கு இது சமர்ப்பணம் என கூறியுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 750 பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்ட "AzaadiSat" என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது, குறிபிடத்தக்கது.