பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் 7 முக்கிய மாற்றங்கள்

LPG cylinder price Aadhaar Budget 2026
By Ragavan Jan 29, 2026 01:13 PM GMT
Report

வருகிற பிப்ரவரி 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

இதில் மத்திய பட்ஜெட் தாக்கல் முதல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் வரை பல முக்கிய மாற்றங்கள் அடங்கும்.

முக்கிய மாற்றங்கள் 

மத்திய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வேலைவாய்ப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன் போன்ற அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வங்கி கணக்குகள்: 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை பரிவர்த்தனை இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் செயலற்றதாக மாற்றப்படும்.

Fastag: கார், ஜீப், வேன்களுக்கு வழங்கப்படும் ஃபாஸ்டாக்-க்கு இனி KYC தேவையில்லை.

[6HLQ7U]

குறைந்தபட்ச இருப்புத் தொகை: பந்தன் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பான்-ஆதார் இணைப்பு: ஜனவரி 31-க்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் பிப்ரவரி 1 முதல் செயலிழக்கச் செய்யப்படும்.

சிலிண்டர் விலை: வீட்டு மற்றும் வணிக LPG சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும்.

வங்கி விடுமுறைகள்: பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.

இந்த மாற்றங்கள், பொதுமக்களின் குடும்ப பட்ஜெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, வங்கி கணக்கு, LPG விலை, பான்-ஆதார் இணைப்பு போன்றவை நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.