“ரொம்ப அடிக்கிறாங்க” - இந்திய அணியை பார்த்து மிரண்டு போன ஆஸ்திரேலியா பிரபலம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலாக திகழும் என ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓபனாக தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது.அடுத்ததாக சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தநிலையில் இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணி நிச்சயம் அனைத்து அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 உலக கோப்பையை வெல்வதற்கான அனைத்து விஷயங்களும் இந்திய அணியிடம் உள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்திய வீரர்கள் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளில் ஆடியதால், அமீரக நிலைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளனர். என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
