பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - டி20 வரலாற்றில் கிடைத்த பெரிய வெற்றி

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றி சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பெறும் 100வது வெற்றியாகும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 வெற்றிகளை பதிவு செய்த 2வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
ஆனால் ஏற்கனவே 100 டி20 வெற்றிகளைப் பெற்ற முதல் அணியாக பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது என்றாலும் அதிவேகமாக 100 வெற்றிகளை பெற்ற அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்திருக்கிறது. 163 போட்டிகளில் பங்கேற்று பாகிஸ்தான் 100 வெற்றியையும், இந்தியா 155 போட்டிகளிலேயே 100வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் டி20 வெற்றிக்கு வீரேந்தர் சேவாக்கும், 50வது டி20 வெற்றிக்கு விராட் கோலியும், 100வது டி20 வெற்றிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக பதவி வகித்துள்ளனர்.