இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற்று வருகிறது. அஹமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 தொடருக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன.
டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில் அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது 20 ஓவர் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே இந்தியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.