இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து - எதிகாத் நிறுவனம் தகவல்

India Emirates Flight Service
By Thahir Aug 02, 2021 04:52 PM GMT
Report

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து 7-ந் தேதிக்கு பிறகும் தொடர வாய்ப்பு உள்ளதாக எதிகாத் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு விமான சேவை ரத்து - எதிகாத் நிறுவனம் தகவல் | India Emirates Flight Service

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24-ந் தேதியிலிருந்து அமீரகத்துக்கு விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத் நிறுவனம் தெரிவித்தது.

எனினும் ஒரு சில நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விமான சேவை தடையானது 7-ந் தேதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் கொரோனா பாதிப்பு சூழ்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சூழ்நிலையை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிகாத் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் வருகிற 7-ந் தேதி வரை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமீரகத்துக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும் தூதரக அதிகாரிகள், கோல்டன் விசா பெற்றவர்கள், முதலீட்டு விசா வைத்திருப்பவர்கள், எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு வருபவர்கள், அமீரகத்தை சேர்ந்தவர்கள், அரசு தூது குழுவினர் அமீரகத்துக்கு வருவதற்கு எந்தவிதமான தடையுமில்லை.