ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா வழங்கிய எச்சரிக்கை

India Israel Iran
By Karthikraja Feb 28, 2026 08:49 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், தனது குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை வழங்கியுள்ளது.

ஈரான் மீது தாக்குதல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. 

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா வழங்கிய எச்சரிக்கை | India Embassy Advise Citizens In Iran And Israel

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சத்தலைவர் அலி காமேனியின் வீடுகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் அவர் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஈரானில் வான்வெளி மூடப்பட்டுள்ளதாகவும், மக்களை பாதுகாக்கும் நோக்கில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஈரானுக்கு அணு ஆயுதம் செல்வதை அனுமதிக்க முடியாது. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம். ஈரானின் கடற்படையை முற்றிலுமாக அழிப்போம் என டிரம்ப் வீடியோ வெளியிட்டுள்ளார். 

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; இந்தியா வழங்கிய எச்சரிக்கை | India Embassy Advise Citizens In Iran And Israel

இந்நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வீட்டில் இருக்குமாறு ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்,சரிபார்க்கப்பட்ட உள்ளூர் செய்திகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், அவசர தேவை ஏற்பட்டால் 24 மணி நேரமும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.