லடாக்கில் நிலநடுக்கம்... - கட்டிடங்கள் உலுங்கின... - முன்பே எச்சரித்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ்..!

India Earthquake Ladakh
By Nandhini Feb 11, 2023 12:39 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

லடாக்கை 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் நிலநடுக்கம்

லடாக்கின் கார்கில் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான தேசிய மையத்தின் தகவலின்படி, இன்று மாலை 03:17 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டிடங்கள் உலுக்கியதால் அச்சம் அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஆனால், உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.

துருக்கி நிலநடுக்கம் - 3 நாட்களுக்கு முன் கணித்த நபர்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் 3 நாட்களுக்கு முன்பு, நெதர்லாந்தைச் சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் என்ற டச்சு ஆராய்ச்சியாளர் கடந்த வாரம் வரும் திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்து டுவிட் செய்தார்.

இதனையடுத்து, மத்திய துருக்கியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் அப்பகுதி முழுவதும் அழுத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக பாலஸ்தீனத்திற்கு நில அதிர்வு நடவடிக்கைகள் உள்ளன என்று மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார்.

india-earthquake-magnitude-4-2-ladakh-kargil

அடுத்த நிலநடுக்கம் இந்தியாவில் தான்...?

இந்தியா-பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்திருந்தார். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க நில அதிர்வுகள் இறுதியில் பாகிஸ்தானையும் இந்தியாவையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் ஆப்கானிஸ்தானில் தொடங்கும் ஒரு பெரிய நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த நில அதிர்வு இறுதியில் பாகிஸ்தான், இந்தியாவைக் கடந்து இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.       

தற்போது அவர் சொன்னதுபோல் லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.