ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானம் : வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தமைக்கு எதிராக ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா இணைத்தமைக்கு எதிராக ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது
இது குறித்து இந்தியா தனது கருத்தினை கூறுகையில் : இந்தியாவில் சார்பில் கூறுகையில் “ தேசத்தின் சூழலை நன்கு உணர்ந்து சிந்தித்து நிலையான முடிவுகளை எடுத்தோம். பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கத் தயாராக உள்ளது.
வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலமும், தூதரக நடவடிக்கை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதை இந்தியா முக்கியமாகக் கொள்கிறது” எனத் தெரிவித்தது.
இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்திற்கு எதிராக ரஷ்ய ஆதரவு நாடுகள் 5 வாக்களித்தன.
ஆனால் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. இந்தியா நடுநிலைமையை நாடுவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.