50 ஆண்டுகளுக்கு பின் திரும்பிய வரலாறு - கொண்டாடும் இந்திய அணி ரசிகர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
ரோகித் சர்மாவின் முதல் வெளிநாட்டு சதம், பும்ராவின் 100வது விக்கெட் என சிறப்பு வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி மூலம் மற்றொரு சிறப்பும் நிகழ்ந்துள்ளது. அது பெருமை மிக்க ஓவல் மைதானத்தில் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா பெற்றிருக்கும்
முதல் டெஸ்ட்வெற்றி இதுவாகும். இதனால் 50 ஆண்டுக் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி வருகிறது.