மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்- முதல்வர் எடப்பாடி

india world curfuew
By Jon Dec 29, 2020 06:03 PM GMT
Report

தமிழகத்தில் மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகையே பீதியடைய செய்து வருகிறது.

இதனை எதிர்கொள்ளுதல், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், புதிய தளர்வுகள் அமல்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும், அரசு எடுத்த நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார்.