ராஜஸ்தானில் மீண்டும் இரவு ஊரடங்கு

india-curfew-rajastan
By Jon Jan 03, 2021 09:02 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலத்தின் பதின்மூன்று நகர்ப்புற மாவட்டங்களில், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ,கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் & கங்கநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இரவு நேரஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

இரவு 8 மணிமுதல் 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நேரத்திற்கு முன்பே அனைவரும் தங்கள் வீடுகளை அடைவதற்கு ஊழியர்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் அலுவலகம், கடைகளை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனாலும், மருந்து கடைகள், அத்தியாவசிய சேவைகள் போன்ற தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.