"மீண்டும் வருகிறது இரவு நேர ஊரடங்கு" - மாநிலங்களுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு
கடந்த 2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் உலக அளவில் பரவிய கொரோனா வைரஸை கண்டு உலக நாடுகளே பயந்து நடுங்கியது. இருந்தாலும், இன்று வரை கொரோனா பரவல் முழுமையாக ஒழிந்ததாக தெரியவில்லை.
இந்த கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சக்கணக்கான மக்களை கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
இந்த கொரோனா தொற்று சாமானியர்கள் முதல் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வரை பலரும் தங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர். பொருளாதார சூழலில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளின் தீவிர கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கிட்டத்தட்ட 200 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் அதிவேகமாக பரவ கூடிய தொற்று என்பதால் பண்டிகை கால கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதனையடுத்து, நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமைக்ரான் பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில் கண்காணிப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதனால் விரைவில் மாநிலங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.