கங்குலியை வம்பிழுத்த சச்சின் நண்பர் : விராட் கோலி விவகாரத்தில் பதிலடி

cricketer kohli vinodkambliganguly
By Irumporai Jan 01, 2022 03:55 AM GMT
Report

விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து கடந்த மாதம் பெரும் சர்ச்சை எழுந்தது. ஐ.சி.சி. கோப்பையை வெல்லாததால் தான் ஒருநாள் போட்டிகளிலிருந்து தமது கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டதாக விராட் கோலியே ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் இந்திய அணி முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ள 4வது கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை.

இந்த நிலையில் சச்சினின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்பிளி, சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து நிறைய பேசப்பட்டது.

காலநிலைகளும் நமக்கு எதிராக இருந்தது, ஆனால் நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள். நிச்சயம் இது அசத்தலான வெற்றி தான்.இதன் மூலம் உலகின் சிறந்த கேப்டன் தாம் தான் என்பதை அனைவருக்கும் விராட் கோலி நிரூபித்துள்ளார்.

பேட்டிங்கை பொறுத்தவரை நாம் இந்த தொடரிலேயே பழைய விராட் கோலியை பார்ப்போம் என்று கூறியுள்ளார். விராட் கோலியின் கேப்டன்ஷிப் பற்றி கங்குலி உள்ளிட்டவர்கள் விமர்சனம் செய்ய, அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக விராட் கோலி இந்த வெற்றியை பெற்றுள்ளதாக மறைமுகமாக பதில் தந்துள்ளார் வினோத் காம்பிளி.