ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

#india #test #australia
By Jon Dec 25, 2020 10:18 PM GMT
Report

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான சாதனை படைத்தது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

பங்கேறகவுள்ள இந்திய அணி வீரர்களின் விவரம்:- ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் விடுப்பில் சென்றுள்ளார், அவருக்கு பதிலாக அஜின்க்யா ரகானே கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Gallery