‘IND vs SA‘ கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. வெல்லப்போவது யார்? - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

Nandhini
in கிரிக்கெட்Report this article
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.
நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், முதலில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது.
இதனையடுத்து, 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
வெல்லப்போவது யார்?
இந்நிலையில், இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில், மதியம் 1.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று சமநிலையில் உள்ளதால், தொடரை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆர்வமுடனும் உள்ளனர்.