குத்தாட்டம் போட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video Indian Cricket Team
By Nandhini Aug 23, 2022 08:08 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒயிட்வாஷ் செய்த இந்திய கிரிக்கெட் அணி

ஜிம்பாப்வே மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி சென்றது.

இவ்விரு அணிகள் மோதிய முதல், இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனையடுத்து, நேற்று நடைபெற்ற இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் நடந்தது.

இப்போட்டி இறுதியில் 49.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது.

குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர்கள் 

இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாஸாக குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.   

India cricket player dance