என்னை மட்டுமில்லை இந்த முக்கிய வீரரையும் டெல்லி அணி கழட்டிவிடும் - கடுப்பான அஸ்வின்

Delhi Capitals Ravichandran Ashwin
By Anupriyamkumaresan Nov 26, 2021 06:19 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணி இந்த இரண்டு வீரர்களை நீக்கி விடும் என்று டெல்லி அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தனது அணியை தக்க வைத்துக்கொள்ளலாம், எந்த வீரரை நீக்கலாம் மற்றும் எந்த புதிய வீரரை அணியில் இணைக்கலாம் என்ற திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் வருகிற 2022 ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

என்னை மட்டுமில்லை இந்த முக்கிய வீரரையும் டெல்லி அணி கழட்டிவிடும் - கடுப்பான அஸ்வின் | India Cricket Player Ashwin Byte For Delhicapitals

இந்தப் புதிய அணிகளில் யார் கேப்டனாக இருப்பார், எந்த வீரர்களை எல்லாம் அந்த அணி தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் தீட்டி வருகிறது என்பது குறித்தான விவாதங்கள் தற்பொழுது பேசு பொருளாக உள்ளது. இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த இரண்டு பெரிய நட்சத்திர வீரர்களை நீக்கி விடும் என்று தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, வருகிற 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயரும் இருக்க மாட்டார்,நானும் இருக்க மாட்டேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.

என்னை மட்டுமில்லை இந்த முக்கிய வீரரையும் டெல்லி அணி கழட்டிவிடும் - கடுப்பான அஸ்வின் | India Cricket Player Ashwin Byte For Delhicapitals

இவருடைய இந்த ஸ்டேட்மென்ட் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்பொழுது மிகவும் பேசப்பட்டு வருகிறது,குறிப்பாக அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரண்டு நட்சத்திர வீரர்களுமே ஒரு அணியை வழி நடத்துவதற்கான தகுதி படைத்துள்ளதால், இந்த இரண்டு வீரர்களையும் நிச்சயம் அனைத்து அணிகளும் டார்கெட் செய்யும் குறிப்பாக புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகள் இந்த இரண்டு வீரர்களையும் எப்படியாவது தனது அணியில் இணைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.