2028ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் 2022ம் ஆண்டு ஐபில் குறித்து முக்கிய ஒப்புதலை வழங்கியது இந்தியா கிரிக்கெட் வாரியம்
2022 ஐ.பி.எல் போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் 89ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத்தில் நடைபெற்றது. மேலும் அந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
அது குறித்த முழு விவரங்களும் பின் வருமாறு, 2022 ஆம் ஆண்டிலிருந்து, ஐபி எல் போட்டிகளில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் சேர்க்கப்படும். இன்றைய கூட்டத்தில் மேலும் இரண்டு அணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2022 ஐபிஎல் லில் இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடமிருந்து சில விளக்கங்களைப் பெற்ற பின்னர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், 20 ஓவர் போட்டி வடிவத்தில், கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான ஐ.சி.சி முயற்சியை ஆதரிக்க வாரியம் முடிவு செய்து உள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பு காரணமாக உள்ளூர் போட்டிகள் குறைக்கப்பட்டதால். அதில் பங்கேற்ற வீரர்களுக்கும் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஐ.சி.சி வாரியத்தில் இயக்குநராக சவுரவ் கங்குலி தொடர்ந்து இருக்க ஆதரவாக பொதுக்குழு முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.