100 கோடி தடுப்பூசி - 9 மாதங்களில் சாதனை படைத்த இந்தியா

india-covid-injection
By Nandhini Oct 21, 2021 04:58 AM GMT
Report

100 கோடி கோவிட் தடுப்பூசி என்ற புதிய மைல் கல்லை இந்தியா எட்டி சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து, 100 கோடி தடுப்பூசி என்ற மைல் கல்லை 9 மாதங்களில் இந்திய எட்டி இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் உத்தரகாண்ட்டில் அதிகமான முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தபட்டிருக்கிறது. இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். 51 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

100 கோடி தடுப்பூசி - 9 மாதங்களில் சாதனை படைத்த இந்தியா | India Covid Injection