இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை..!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1, 27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,81,75,044 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஒரே நாளில் 2,795 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை எண்ணிக்கை 3,31,895 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஒரே நாளில், 2,55,287 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,59,47,629 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 19வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.