பிரிட்டனுக்கு ஜன.8 முதல் மீண்டும் விமான சேவையினை தொடங்கும் இந்தியா

india-corona-virush
By Jon Jan 02, 2021 07:56 AM GMT
Report

வரும் 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவையை துவக்க இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் புதிதாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக , உலகின் பல்வேறு நாடுகளும் பிரிட்டனுக்கு விமான சேவையினைதடை செய்வதாக கடந்த டிச.23ம் தேதி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

பின்னர் ஜனவரி 7 வரை இதற்கான தடை நீட்டித்து , இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரிட்டனுக்கு வரும் 8-ம் தேதி முதல் விமான சேவை துவங்க இருப்பதாக மத்திய விமானத்துறை தெரிவித்துள்ளது.

விமானம் செல்ல அனுமதி அளித்தாலும் , முதல் கட்டமாக 15 விமானங்கள் மட்டுமே டில்லி, மும்பை,பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து சேவையை துவக்கும் என ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.