சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை குணப்படுத்துமா?-மத்திய அரசுக்கு ஒடிசா நீதிமன்றம் நோட்டீஸ்
சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை குணப்படுத்துமா என 3 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மலைகளில் வாழும் இந்த மக்கள்சிவப்பு எறும்புகளை பச்சை மிளகாயுடன் அரைத்து இந்த சட்னி செய்கின்றனர்.
இதனை சளி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு மருந்தாக கொடுக்கின்றனர்.இதனால் நோய் குணமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் கொரோனாவை குணப்படுத்த இந்த மருத்துவமுறையினை பயன்படுத்தலாம் என பரிபடாவை சேர்ந்த பொறியாளர் நயாதார், பொதுநலன் மனுவை ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவினை,மத்திய ஆயுஷ் அமைச்சகம், மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை விசாரித்து 3 மாதங்களில் பதில் கூற வேண்டும் என ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.