இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வு

india virush corna
By Jon Dec 31, 2020 05:32 PM GMT
Report

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாற்றம் பெற்ற வீரியமிக்க கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் முந்தைய தொற்றைவிட 70 விழுக்காடு அதிக வேகத்தில் பரவும் எனக் கூறப்படுகிறது.

புதுவகைத் தொற்று பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோரை விமான நிலையங்களிலேயே சோதித்துத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.