உருமாறிய கொரோனாவையும் எங்கள் தடுப்பு மருந்து அழிக்கும்: ஃபைசர் நிறுவனம்.!
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்த பிறகும் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் முதலில் இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை விதித்துள்ளன. இங்கிலாந்து அரசும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி, இந்த உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த ஆய்வு முடிவுகள் முதற்கட்டமாக கிடைத்த தகவல்கள்தான் எனவும், இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு தெரியவரும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.