இந்தியாவில் உருமாறிய கொரோனா 102 ஆக அதிகரிப்பு.. சுகாதாரத்துறையின் எச்சரிக்கை!
உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆனது ஒரு வருட காலமாக அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளிலும் இதற்கான தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இந்தியாவிலும், கொரோனா தடுப்பூசியை தொடங்கினர். இதையடுத்து, பிரிட்டனை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கும் பரவியுள்ளது.
மேலும், இந்தியாவிலும், உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்த மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.