பிரத்யேக மையங்களில் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்

vaccine india corona
By Nandhini Dec 28, 2021 08:44 AM GMT
Report

15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்த பிரத்யேக தடுப்பூசி மையங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி முதல் 15 – 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, 15-18 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதற்கு தடுப்பூசி போடுபவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 15-18 வயதுடையோருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்த பிரத்யேக தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநில அரசு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. 

பிரத்யேக மையங்களில் 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் | India Corona Vaccine