பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்த 279 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை- தேடலில் தெலுங்கானா

india corona thelungana
By Jon Dec 28, 2020 12:35 PM GMT
Report

பிரிட்டனில் இருந்து தெலுங்கானா வந்தபலரது முகவரிகள் மற்றும் அலைபேசி எண்கள் போலியானதாக உள்ளதால், 279 பேரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டனுடன் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகள் துண்டித்துள்ளன.

அதே சமயம், பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் அடையாளம் காணப்பட்டு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, அவர்களுக்கு புதிய வகை கொரோனாவின் தாக்கம் உள்ளதா? என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த 279 பயணிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.

பிரிட்டனில் இருந்து வந்த 184 பேர் தவறான தொலைபேசி எண்களையும் தவறான முகவரிகளையும் கொடுத்துள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.

இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் தேடலை விரைவுபடுத்தியுள்ளனர்.