இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு பாதிப்பு

india corona virus symptoms omicron
By Nandhini Jan 03, 2022 04:19 AM GMT
Report

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,750 ஆக உயர்ந்திருக்கிறது.

நேற்று முன்தினம் கொரோனாவால் 16,764 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை 27,553 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

இந்தியாவில் ஒரேநாளில் 9,249 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

நேற்று 284 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை 4,81,893 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் 10,846 பேர் குணமாகியுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,42,95,407 ஆக உள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,45,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1,45,68,89,306 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,700 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று 1,525 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,700 ஆக உயர்ந்திருக்கிறது.