இந்தியாவில் ஆயிரத்தைக் கடந்தது ஒமைக்ரான் - மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சி
இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 16,764 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று முன்தினம் 9,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை,13,154 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இந்தியாவில், ஒரே நாளில் 7,585 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி இருக்கிறார்.
கடந்த 24 மணி நேரத்தில் 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,270 ஆக உயர்ந்திருக்கிறது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 125 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். டெல்லியில் 370 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 57 பேர் குணமாகி இருக்கிறார்கள்.