வீரியத்துடன் உச்சமடையும் Omicron வைரஸ் தொற்று - அறிகுறிகள் என்னென்ன?

india-corona-omicron-virus-symptoms
By Nandhini Nov 29, 2021 06:46 AM GMT
Report

கொரோனா வைரஸை தொடர்ந்து, கொரோனாவின் புதிய மாறுபாடு வைரஸாக ஒமிக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பல நாடுகளிலும் விமான சேவையை ரத்து செய்து தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதியை தொடங்கி இருக்கின்றனர். மேலும், தென்னாப்பிரிக்காவில் பரவிய இந்த வைரஸிற்கு பி 1.1.529 என கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா வைரஸுக்கு ஓமிக்ரான் (Omicron) என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளை செயலிழக்கச் செய்யக் கூடியதாகவும் இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இஸ்ரேல், பெல்ஜிய, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளிலும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள தொற்றுநோய்க்கான பதில் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் (CERI) இயக்குனர் Tulio de Oliveira கருத்துப்படி, B.1.1529 மாறுபாடு தற்போது Gauteng இல் 90% எண்ணிக்கைகளில் உள்ளது. அறிகுறிகள் புதிய மாறுபாடு பற்றிய தகவலுக்குப் பிறகு, பல நாடுகள் தென்னாப்பிரிக்காவுடனான விமானங்களை நிறுத்தி சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மேலும், கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் 'ஓமிக்ரான்' மாறுபாடு அதிகமாக பரவுகிறது. இது கடுமையான நோயை ஏற்படுத்தும். டெல்டா போன்ற பிற தொற்று வகைகளைப் போலவே, சில நபர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையை அறிகுறியாக வெளியிடுகிறது.

மேலும், அளவுக்கு அதிகமான சோர்வு, தசைகளில் வலி, கரகரப்பான தொண்டை, வறட்டு இருமல் ஆகியவை இதன் அடையாளங்களாகும் என்று ஒமிக்ரானுக்கு சிகிச்சையளிக்கும் தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

வீரியத்துடன் உச்சமடையும் Omicron வைரஸ் தொற்று - அறிகுறிகள் என்னென்ன? | India Corona Omicron Virus Symptoms