4 மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை வெற்றி!

india kerala covid
By Jon Dec 30, 2020 10:14 PM GMT
Report

ஆந்திரா, குஜராத், பஞ்சாப், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும்.

தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு,அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் அலைபேசியில் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட 30 நிமிட நேரத்துக்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களது தகவல்கள் கோ-வின் என்ற மத்திய அரசின் புதிய வலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டன.

அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது தொடர்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன என்று கூறப்பட்டுள்ளது.