2022 ஆம் ஆண்டு கொரோனா முடிவுக்கு வரலாம்.. உலக சுகாதார அமைப்பு

who india corona- soumyaswaminathan endemicstage
By Irumporai Aug 25, 2021 05:58 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கடந்த இரண்டு வருடமாக உலகை உலுக்கு வருகிறது  கொரோனா உலக நாடுகள் மீள்வது குறித்து விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில்  உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் வெளியிட்டுள்ள கருத்தின் படி இந்தியாவில் முன்பை விட தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு  கொரோனா முடிவுக்கு வரலாம்.. உலக சுகாதார அமைப்பு | India Corona Endemic Stage Who Soumyaswaminathan

அதே சமயம்  கொரோனா  தடுப்பூசி செலுத்தப்படாத பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்ப்பதாகவும் அப்படி செலுத்திவிட்டால் அடுத்த ஆண்டு இறுதியில் அதாவது 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.