இந்தியாவில் புதிய வகை கொரோனா - ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட தகவல் - அச்சத்தில் மக்கள்

india-corona
By Nandhini Oct 26, 2021 07:46 AM GMT
Report

இந்தியாவில் ஏ.ஒய். 4.2 கொரோனா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நோய்க்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலையின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. 8 மாதங்களுக்குப் பிறகு 13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு இன்று 12,428 ஆக பாதிவாகி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 356 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,63,816 ஆக உள்ளது. கொரோனாவில் குணமடைவோர் விகிதம் 98.19% ஆக இருப்பதாகவும் உயிரிழப்பு விகிதம் 1.33% ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஏ ஒய் 4.2 எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமீரன் பாண்டா கூறுகையில், ஏ ஒய் 4.2 வகை கொரனோ வைரஸால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது SARS-CoV-2 வைரஸின் டெல்டா மாறுபாட்டின் துணை பரம்பரை ஆகும். புதிய டெல்டா வேரியன்ட் மிகவும் பரவக்கூடியதாக தெரிகிறது. ஆனால் இது ஆபத்தானது அல்ல. இந்த வைரசின் வீரியம் மிக்கதாக இருக்கும் என்று சொல்வது கடினம். இது பற்றி யாரும் பீதியைக் கிளப்ப கூடாது. விழிப்புணர்வைதான அதிகரிக்க வேண்டும். ஏ ஒய் 4.2 வகை வைரஸ் ஆந்திராவில் 7, கர்நாடகாவில் 2, தெலுங்கானாவில் 2, கேரளாவில் 4, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்ட்ராவில் ஒரு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை பிரிட்டனில் அதிகளவில் பரவியுள்ளது என்றார்.