இந்திய முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவானே

Commander of the Indian 3rd Battalion
By Nandhini Dec 16, 2021 04:05 AM GMT
Report

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின்ராவத் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

நாடே அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்தது. இந்நிலையில், முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டிருக்கிறார்.

முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்படுவதற்கு முன்னாள் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்திய முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவானே | India Commander Of The Indian 3Rd Battalion