போர் விமானங்கள், ட்ரோன்களுக்கு செக் - பாகிஸ்தானுக்கு விழுந்த அடுத்த அடி
பாகிஸ்தான் பதிவு செய்யப்பட்ட விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
வான்வெளி மூடல்
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடைய, சீனா அல்லது இலங்கை போன்ற நாடுகளின் வழியாக பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களைத் திருப்பிவிடும் நிலை ஏற்படும்.
மேலும், ஜாமர் கருவிகள் பாகிஸ்தான் எல்லையில் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதல்களை தடுக்க முடியும்.
தொடர்ந்து இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்கள் நங்கூரமிடுவதை தடை செய்யவும் இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.