பஹல்காம் தாக்குதல் எதிரொலி - பாகிஸ்தான் எல்லையை மூடிய இந்தியா
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா பதிலடி
இதனையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தத்தை தாற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.