மூன்றாவது டி20 போட்டி : ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய இந்திய அணி… குவியும் வாழ்த்துக்கள்

Indian Cricket Team Australia Cricket Team
By Irumporai Sep 26, 2022 02:26 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அனியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மூன்றாவது டி20 போட்டி : ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய இந்திய அணி… குவியும் வாழ்த்துக்கள் | India Clinch Series Win With 6 Wicket Australia

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களும், கேமிரோன் க்ரீன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன்பின் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் (1) மற்றும் ரோஹித் சர்மா (17) ஆகியோர் விரைவாஅக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

ரன்கள் குவித்த இந்தியா

இதன்பின் கூட்டணி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – விராட் கோலி ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு விளையாடியது. சீராண இடைவேளையில் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசிய இந்த கூட்டணி தேவைக்கு ஏற்ப ரன்னும் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 69 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மூன்றாவது டி20 போட்டி : ஆஸ்திரேலியாவை தட்டி தூக்கிய இந்திய அணி… குவியும் வாழ்த்துக்கள் | India Clinch Series Win With 6 Wicket Australia

சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை இழந்த பிறகும் ஹர்திக் பாண்டியாவுடன் கூட்டணி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 64 ரன்கள் எடுத்த போது கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

தொடரை கைப்பற்றிய இந்திய அணி

இதன்பின் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து போட்டியை முடித்து கொடுத்ததன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியது.

இந்தநிலையில், டி.20 போட்டிகளுக்கான நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டி.20 தொடரை வென்ற இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.