ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்தில் இந்தியா - எதில் தெரியுமா?

United States of America Japan China India
By Sumathi Dec 01, 2025 07:24 AM GMT
Report

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

தலைசிறந்த நாடு

ஒரு நாட்டின் பொருளாதாரம், ராணுவ பலம், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் நிலை மற்றும் உலகுக்கு அந்த நாடு அளிக்கும் பங்களிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு

india vs japan

உலகின் சிறந்த நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அடிப்படையாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு 'ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அதில் பொருளாதாரத் திறன், ராணுவத்திறன், நிலைத்தன்மை, எதிர்கால வளங்கள், பொருளாதார உறவுகள், பாதுகாப்பு வலையமைப்புகள், செல்வாக்கு, கலாசார செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடற்படைகள் - இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடற்படைகள் - இந்தியாவுக்கு எந்த இடம்?

இந்தியா?

அவ்வாறு அமெரிக்கா முதல் இடத்தையும் (80.5 புள்ளிகள்), அதற்கடுத்தபடியாக சீனா 2-வது இடத்தையும் (73.7 புள்ளிகள்) பெற்று இருக்கிறது. தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் (40 புள்ளிகள்) உள்ளது.

india

இந்தியாவின் இந்த முன்னேற்றத்துக்கு நாட்டின் பொருளாதார மீட்பு, அதிகரித்த ராணுவ பலம், சர்வதேச அரங்கில் ராஜதந்திர செல்வாக்கு, அரசியல் முக்கியத்துவம் போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இதனையடுத்து 38 புள்ளிகளுடன் ஜப்பான் 4-வது இடத்திலும், ரஷ்யா 32.1 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது.